Tamil Wealth

கூந்தலால் உங்கள் உடற்பயிற்சிக்கு இடைஞ்சலா இருக்கா?

கூந்தலால் உங்கள் உடற்பயிற்சிக்கு இடைஞ்சலா இருக்கா?
பெண்கள் உடற்பயிற்சி செய்யும் பொழுது தங்கள் கூந்தலால் ஏற்படும் இடையூறுகளுக்கு என்னவெல்லாம் செய்கிறார்கள், செய்யலாம் என தெரியுமா உங்களுக்கு, தெரிந்து கொண்டு அதனை பின்பற்றலாம்.

உடற்பயிற்சி செய்யும் பொழுது தலை முடியை விரித்து விட்டால், வியர்வை அனைத்தும் தலையில் சேர்ந்து முடிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க முடிகளை நன்கு இறுக்கமாக கட்டி கொள்ள வேண்டும். வியர்வையால் வெளியேறும் பாக்டீரியாக்கள் நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும் மற்றும் துர்நாற்றங்களை வீச செய்யும்.

எண்ணெய் :

உடற்பயிற்சி செய்வதற்கு முந்தய நாளே தலைக்கு எண்ணெய் வைத்து கொள்ளுங்கள். இது நீங்கள் உடற்பயிற்சி செய்யும் பொழுது முடிகளில் சேரும் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றங்கள் மற்றும் முடிகளில் ஏற்படும் குறைபாடுகளை தடுக்கும். பாக்டீரியாக்களால் எவ்வித தொற்றுகளும் வராமல் பாதுகாக்கும்.

உடற்பயிற்சி செய்த பின் உடலில் இருக்கும் வியர்வையை கட்டாயம் கழுவ வேண்டும். பின் துணியை கொண்டு துடைக்க வேண்டும். இது உடலில் தாங்கும் பாக்டீரியாக்களை விரைவில் வெளியேற்றும். தலையில் இருக்கும் வியர்வையை போக்க தலைக்கு சீயக்காய் போட்டு குளிக்க நல்லது.

உடற்பயிற்சி செய்ய அதற்கு உகந்த ஆடைகளையே அணிந்து கொள்ளுங்கள். வியர்வையை அப்படியே உடலில் இருக்க விட வேண்டாம், அது முடிகளில் வறட்சியை ஏற்படுத்தும் மற்றும் உடலில் உபாதைகளை ஏற்படுத்தும் அளவிற்கு சென்று விடும்.

 

Share this story