Tamil Wealth

வாந்தி ஏற்படும் நிலை உருவாகிறதா? சரி செய்யும் முறைகள் பார்க்கலாமா?

வாந்தி ஏற்படும் நிலை உருவாகிறதா? சரி செய்யும் முறைகள் பார்க்கலாமா?

உணவுகள் ஒத்துக்கொள்ளாமல் உருவாகும் மன நிலையால் வாந்தி ஏற்படும் நிலை உருவாகும். சிலருக்கு எதையேனும் பார்த்தால் ஏற்படும் அலற்சியால் கூட வாந்தியின் நிலைக்கு தள்ள படுவார்கள். அப்பொழுது சிறிது நேரம் கண்களை மூடி மூச்சு பயிற்சி செய்து மன நிலையை மாற்ற சிந்தனைகள் மாறி வாந்தி ஏற்படும் நிலை விடுபடும். அருவருப்பான பொருட்களை பார்க்க வயிற்று குமட்டல் ஏற்பட்டு சாப்பிட உணவுகள் அனைத்தும் வெளியேறும். ஒருவருக்கு வாந்தி ஏற்படும் நிலை உண்டாகிறது என்றால் அவரது முகத்திற்கு காற்றோட்டம் மிகவும் அவசியம்.

உணவுகள் அல்லது எந்த விதமாக உண்ண கூடிய உணவுகளையும் சாப்பிட்டதும் உறங்குவது, அதிகமான வேலை பளு செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும், இல்லையென்றால் உணவுகள் செரிக்காமல் வயிற்றில் வலி உண்டாகி, தலை சுத்தல் வந்து வாந்தியை ஏற்படுத்தும். வாந்தி ஏற்படும் பொழுது அல்லது தலை சுத்தல் உண்டாகும் நிலையில் இஞ்சி சாற்றினை அருந்த நல்ல பலனை கொடுத்து உணவுகளை விரைவில் செரிக்க செய்யும்.

 

Share this story