பேரிக்காயில் இவ்வளவு நன்மைகள் அடங்கியுள்ளதா?
Feb 8, 2018, 09:00 IST

பேரிக்காயிற்கு இன்னொரு பெயரும் உண்டு அது ஏழையின் ஆப்பிள் என்பது தான். இதற்கு காரணம் இதன் விலையோ குறைவு அது மட்டுமில்லாமல் ஒரு ஆப்பிளில் என்னென்ன சத்துகள் அடங்கியுள்ளனவோ அதே அளவு சத்து பேரிக்காயிலும் அடங்கியுள்ளது. இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
- வாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்ணை சரி செய்யும் ஆற்றல் பேரிக்காயிற்கு உண்டு. தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டால் இந்த புண் வரவே வராது.
- இதய படபடப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களையும் சரி செய்யும் தன்மை இதற்கு உண்டு.
- குழந்தைகளுக்கு இதை தினமும் கொடுத்தால் இதில் உள்ள இரும்புச் சத்து, கால்சியம், சுண்ணாம்பு சத்து போன்றவை குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான எல்லாவற்றையும் கொண்டுள்ளது.
- சாப்பிடும் உணவினால் ஏற்படும் அலர்ஜி காரணமாக ஏற்படும் வயிற்றுப் போக்கை குறைக்க கூடிய ஆற்றல் பேரிக்காயிற்கு உண்டு.
- கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சி பெற உதவியாக இருக்கும். மேலும் குழந்தை பேறுக்கு பின்னர் தாய்ப்பால் சுரப்பதற்கு காலை மற்றும் மாலையில் பேரிக்காய் சாப்பிட்டால் அப்பிரச்சனை சரியாகும்.