பூவரசு மருத்துவ குணம் கொண்டதா?
Sep 4, 2017, 15:35 IST

வெளியே வெள்ளை நிறத்திலும் உள்ளே மஞ்சள் நிறத்திலும் காண படும் இந்த பூவரசு பூவை நாம் பயன்படுத்த நமக்கு கிடைக்கும் பலன்கள் தெரிந்து இனி பயன்படுத்துங்கள் பூவரசு பூவை. இதன் பூக்கள் மட்டுமல்லாமல் இலைகள், பட்டைகள் அனைத்தும் பயன்படுகிறது.
நோய்களை குண படுத்தும் பூவரசு :
- சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைக்கும் இதன் எண்ணெயை பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும்.
- அதிகமாய் பாதிக்க படும் மஞ்சள் நோயில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இதன் இலைகளை அரைத்து குடிக்க மஞ்சள் காமாலையால் ஏற்படும் பக்க விளைவுகளை நம்மை அணுகாமல் தவிர்த்து கொள்ளலாம்.
- பூவரசு மரத்தின் வேர்கள் மிகுந்த மருத்துவ குணம் கொண்டதே. இதனை பொடியாக்கி சருமத்தில் ஏற்படும் சிரங்குகள் மூலம் ஏற்படும் அலற்சி, சொறி இருக்கும் இடத்தில தொடர்ந்து பூசி வர விரைவில் குணம் அடையும்.
- பூவரசின் மிக பெரிய பங்கு தொழு நோயை குண படுத்த இன்றியமையாதது.
- இதன் காய்களில் இருந்து பெறப்படும் அமிலத்தன்மை ரத்த காயங்களுக்கு பயன்படுத்தலாம்.
- இரைப்பை கோளாறுகள் மற்றும் வயிற்றின் உட்புறத்தில் ஏற்படும் அலற்சிகள், புண்களை பூவரசில் இருந்து பெறப்படும் எண்ணெய் பயன்படும்.