நீண்ட நேரம் விழித்திருப்பதால் உடல் நலம் பாதிக்கப்படுமா?

இக்காலத்து இளைஞர்களிடம் உள்ள மோசமான பழக்கங்களில் ஒன்று நீண்ட நேரம் இரவில் விழித்திருத்தல், காலை வெகுநேரம் தூங்குதல். ஆனால் இந்தப் பழக்கம் ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்னர் முற்றிலும் இல்லை என்றே கூறலாம். அவரவர் வேலைக்குச் சென்று வந்தபின்னர் இரவு நேரம் 9 மணிக்குள் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அதனால் இப்போது இருக்கும் உடல் உபாதை அளவு அப்போது இருந்திருக்கவில்லை. நீண்ட நேரம் விழித்திருப்பது அவ்வளவு பெரிய பிரச்சினையா? என்று கேட்கிறீர்களா? ஆமாங்க. உண்மையில் உங்கள் மூளை சோர்வடையும். கண்சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
மிக முக்கியமாக மன அழுத்தம் அதிகரிக்கும். தூக்கம் என்பது குறைந்தது ஒருநாளைக்கு 6 முதல் 7 மணி நேரம் இருப்பது நல்லது. 6 மணி நேரத்தினைவிட குறையும்போது உடல் ரீதியான பாதிப்பு அறிகுறிகள் இல்லாமல் ஏற்படும். அது மிகப் பெரிய அளவிலான பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.
கண் எரிச்சல், தலைவலி, மனச் சோர்வு, வீண் கோபம், அடிக்கடி எரிச்சல் அடைதல் போன்றவை ஆரம்ப நிலையிலான பாதிப்புகளாகும். இதனால் முடிந்த அளவு இரவில் 10 முதல் 11 மணிக்குள் தூங்கி காலை 7 முதல் 8 மணிக்குள் எழுந்துவிடுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியமானது மேம்படும்.