சிவப்பு அரிசி நன்மை தருமா???

சிவப்பு அரிசியில் அதிகம் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள், மெக்னீசியம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சமைத்து சாப்பிட நல்லதொரு உணவாக கருதப்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் கொலஸ்டராலின் அளவை குறைத்து ரத்தத்தை சீராக்கும் திறன் கொண்டது தான் சிவப்பு அரிசியில் இருக்கும் நார் சத்துக்கள்.
குடலில் புற்று நோய் ஏற்படாமல் நம்மை தற்காத்து கொள்ளும் நார் சத்துக்கள் தான் அதிகமே. உடல் வளர்ச்சிக்கும் முடி, நகம் ஆகியவற்றிற்கும் பயன் தர கூடியது.
இந்த அரிசியை சமைத்து சாப்பிட இதய சம்பந்தமான நோய் எதுவும் வராமல் தடுக்கும். இதை தொடர்ந்து சாப்பிட வாய்களில் ஏற்படும் காயங்களுக்கு நல்ல மருந்து. பற்களில் எந்த விதமான குறைபாடுகளும் வராது, பற்கள் விழுந்தாலும் விரைவில் முளைக்கும் தன்மை கொண்டது.
தசை பிடிப்புகள், வீக்கம் குறைந்து தசை வளர்ச்சி நன்கு நடை பெறும். பாலிபீனால் இதில் இருப்பதால் எவ்வித பிரச்சனையும் நம்மை அணுகாது. சமைப்பதற்கு முன் அரிசியை கழுவும் தண்ணீரையும் வீணாக்காமல் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.