பால் முடி வளர்ச்சிக்கு உதவுமா? எப்படி பயன்படுத்தலாம்!

அனைவரும் தங்களை அழகு படுத்துவதில் கொடுக்கும் ஆர்வத்தை தங்கள் முடிகளில் செலுத்துவது இல்லை, இதனால் அவர்களுக்கு சிறு வயதிலே முடி உதிர்வு, நரை முடி, முடிகளில் பிளவு போன்றவை ஏற்பட கூடும். இதற்கு பாலினை பயன்படுத்தி நல்ல பலனை பெறலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? இதை படியுங்கள்.
பாலால் பெரும் முடி வளர்ச்சி :
தலை முடியில் ஏற்படும் சிறு பாதிப்புக்கு கூட காரணம் முடிகளின் வேர் நுனிகளில் ஏற்படும் பொடுகு போன்ற பாதிப்புகளே. இதனை சரி செய்ய பாலினை கொண்டு தினமும் முடிகளின் வேர் நுனி வரை நன்கு தேய்த்து கொண்டு அரை மணி நேரம் கழித்து குளித்து வர நாளடைவில் மாற்றத்தை காணலாம்.
பாலுடன் வேறேதேனும் சேர்த்து கொள்ளலாமா?
பாலினை மட்டுமே தலைக்கு பயன்படுத்த வேண்டும் என்று இல்லை, அதனுடன் அரிசி கழுவிய நீரினை சேர்த்து பயன்படுத்த நல்ல பலனை தரும். பாலில் இருக்கும் நிறமிகள் வேர் நுனிகள் வரை சென்று ஊட்ட சத்துக்களை கொடுக்கிறது. தலைக்கு பயன்படுத்தினால் எப்படியும் வாசனை வரும், அதனை சரி செய்ய சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு குளித்து விடுங்கள். சாதாரண நீரில் அலசுவது நல்லதே, ஆனால் வாசனை வரும்.
பாலுடன் முட்டையின் வெள்ளை கரு :
செய்முறை :
ஒரு குவளையில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியே பிரித்து எடுத்து வைத்து கொள்ளுங்கள், அதனை நன்கு அரைத்து அதனுடன் பாலினை கலந்து கொள்ளுங்கள். இதனுடன் தேன் அல்லது வரிக்கமட்டி காய் சேர்த்து கொள்ள பொடுகு தொல்லைகள் நீங்கும் மற்றும் பேன்கள் ஒழியும்.
முடி உதிர்வு ;
முடிக்கு உதிர்வதை தடுத்து, கருமையான கூந்தலை வளர உதவி புரிகிறது. இதனுடன் தேன் கலந்து பயன்படுத்த நரை முடிகள் மறைந்து கருமையான முடிகளை பெறலாம்.
பாலில் இருக்கும் சத்துக்கள் :
ப்ரோட்டீன், வே( whey), கேசின் போன்றவை அடங்கி இருப்பதால் முடிகளின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. அதேப்போல் நீங்கள் உண்ணும் உணவில் இருக்கும் சத்துக்களை கொண்டும் தலை முடிகளை வளர்ச்சி இருக்கிறது. சிலருக்கு முடிகள் சுருட்டையாக காண படும், அவர்கள் தங்கள் முடிகளை நேராக்க வேண்டும் என்று நினைத்தால், பாலினை வாரத்திற்கு இரு முறை தலைக்கு தேய்த்து குளிக்க ஆரம்பியுங்கள்.