திராட்சை பழம் இப்படியெல்லாம் பயன் தருமா?

திராட்சை பழம் புற்று நோய் ஏற்படாமல் கட்டு படுத்தும் தன்மை கொண்டது, இதனை ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
மலச்சிக்கலை தவிர்க்கும் திராட்சை, குழந்தைகள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.
மஞ்சள் காமலை வராமல் தற்காத்து கொள்ளும் மகிமை கொண்டதே திராட்சை.
பெருங்குடல் சிறுகுடலில் ஏற்படும் தொற்று, அலற்சி, ஊறல் மற்றும் புண்களுக்கு திராட்சை சாப்பிட புண்கள் விரைவில் குணமடையும்..
உடல் சோர்வு, தொடர் இருமல் போன்றவைகளுக்கு திராட்சை சாப்பிட நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.
இதயத்திற்கு புத்துணர்ச்சியை கொடுத்து சிறப்பாக நம்மை செயல் பட வைக்கும், மூளையையும் சுறு சுறுப்பாக செயல் பட செய்யும்.
இதில் அதிகம் உள்ள இரும்பு சத்து பெண்களுக்கு வயிற்று வலி, முது வலி, கை, கால்களில் ஏற்படும் வலிகளுக்கு உகந்தது.
பச்சை திராட்சை சாப்பிட நன்கு பசி எடுக்கும், பசியின்மை காரணமாக அவஸ்தை படும் பலர் இருக்கிறார்கள். இதை சாப்பிடுங்கள் நன்றாக உணவை சாப்பிடுங்கள்.