மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்குமா? குறையுமா?

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்குமா? குறையுமா?

எல்லா பழங்களைக் காட்டிலும் முக்கனிக்கு தனிச்சிறப்பு உண்டு. அதில் குறிப்பாக சொன்னால் ஆரோக்கியம் மற்றும் ருசி ஆகியவற்றை சொல்லலாம். முக்கனியில் இப்போது மாம்பழத்தை பற்றி பார்க்கலாம். அனைவருக்கும் மாம்பழம் சாப்பிட்டால் உடல் பருமன் குண்டாகும் என நினைப்பார்கள். இதை சாப்பிட்டால் என்னாகும் என இப்போது பார்க்கலாம்.

  • மாம்பழத்தை ஜூஸ் அல்லது மில்க் சேக்காக குடித்தால் அதில் சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் கலோரிகளின் அளவு அதிகமாக இருக்கும். இதனால் உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
  • மாம்பழத்தில் அதிக அளவிலான நார்ச்சத்து உள்ளது. எனவே இதை சாப்பிடுவதால் கோடையில் ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனையை சரி செய்யலாம்.
  • பகல் நேரத்தில் மாம்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் முழுவதுமாக நமக்கு கிடைக்கிறது. இதனால் உடலில் கலோரிகள் அதிகமாக எரிக்கப்பட்டு உடல் எடை குறையும்.

இதர நன்மைகள்:-

  • மாம்பழத்தை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். மேலும் கொலஸ்ட்ராலும் அதிகரிக்காது. ஒரு நாளைக்கு மூன்று மாம்பழம் சாப்பிட்டாலும் உங்கள் எடை அதிகரிக்காது.
  • உங்கள் உடல் பலவீனமாக இருப்பதாக உணர்ந்தால் மாம்பழத்தை சாப்பிட்டால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Share this story