கொடம்புளி ஆரோக்கியத்தை கொடுக்குமா?
Sep 7, 2017, 09:30 IST

கருப்பு நிறத்துடன் காண படும் இந்த புளியை நாம் உணவில் சேர்த்து கொள்ள நமக்கு கிடைக்கும் நன்மைகள் தெரிந்து கொள்ளலாமா?
கொடம்புளி :
- இந்த புளியை சமையலுக்கு பயன்படுத்துவது போலவே அதிகமான உடல் பருமனை கொண்டவர்கள் விரைவில் உங்கள் எடை குறைந்து அழகான ஒல்லியான தோற்றத்தை பெறலாம் மற்றும் இதை சாப்பிடுவதின் மூலம் மட்டும் உடல் எடையை குறைக்க முடியாது சில விதிமுறைகளையும் கடை பிடிக்க வேண்டும் அவ்வாறு செய்தல் தான் உங்கள் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றும்.
- இந்த புளியை நீரில் கரைத்து அதன் நீரை கொண்டு கஷாயம் அல்லது அதனுடன் மிளகு, இஞ்சி என சேர்த்து நீர் ஆகாரமாக தினம் காலையில் பல் துலக்கிய பின் அருந்த உடலில் இருக்கும் கொழுப்புகள் கரைக்க படும். இதனை குடித்து விட்டு அசைவ உணவுகளை சாப்பிடுதல் மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுதல், இனிப்பு சுவைகளை அதிகம் உட்கொள்ளுதல் போன்ற எவ்வித உணவுகளையும் எடுத்து கொள்ள கூடாது, அப்படி உண்டால் கொடாம்புளியால் எந்த பயனும் இருக்காது என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.