Tamil Wealth

உங்கள் அழகை கெடுக்கும் மஞ்சள் பற்களை போக்கணுமா ? இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க!

உங்கள் அழகை கெடுக்கும் மஞ்சள் பற்களை போக்கணுமா ? இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க!

மஞ்சள் பற்களால் முக அழகே மாறுபடும், இதனால் சிலர் சிரிப்பதற்கு கூட விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த மஞ்சள் பற்களை போக்க உதவும் சில டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்.

இயற்கை பொருட்களை பயன்படுத்துங்கள்!

வைட்டமின் :

பற்களின் பராமரிப்புக்கு உதவும் வைட்டமின் சி மற்றும் மாலிக் அமிலம் போன்றவை ஸ்ட்ராவ் பெர்ரியில் இருப்பதால் இதனை வாயில் போட்டு நனவு மென்று சாப்பிட வேண்டும் அல்லது ஸ்ட்ராவ் பெர்ரி பழங்களை சுத்தம் செய்த பின்னர் மிக்ஸியில் அரைத்து அதனை பற்களில் தினமும் தேய்த்து வர விரைவில் பற்கள் மஞ்சள் நிறத்தை இழந்து வெண்மை நிறத்தை பெறும்.

எலும்பிச்சை :

எலும்பிச்சை பழத்தின் சாற்றினை தினமும் பற்களில் தேய்த்து வந்தால் பற்களில் இருக்கும் கிருமிகளை நீக்குவதோடு வெண்மையான பற்களையும் கொடுக்கும். இதனுடன் சிறிதளவு உப்பையும் கலந்து பயன்டுத்த மிகவும் நல்லது.

பழங்கள் :

காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும் வைட்டமின்கள் பற்களில் படியும் கறைகளை போக்கவும், வெண்மை பற்களை கொடுக்கவும் உதவுகிறது. காய்கறிகளில் பச்சையாக உண்ண கூடிய கேரட், பழங்களில் ஆப்பிள், பப்பாளி போன்றவைகளை எடுத்து கொள்ள நல்ல பலனை தரும்.

கொப்பளிக்க வேண்டும் :

எந்த உணவுகளை சாப்பிட பிறகு அல்லது ஏதேனும் பானங்களை குடித்த பிறகு வாயினை நீரினை கொண்டு கொப்பளிக்க வேண்டும். இது வாயில் உணவு பொருட்கள் தூண்டுவதை தடுக்கும் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு பயன் உள்ளது.

எண்ணெய் :

ஆயில் புல்லிங் என்பது அனைவருக்குமே தெரிந்ததே. இதனை செய்வதால் பற்கள் மிகவும் சுத்தமாகவும் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது. இதுதான் மிகவும் எளிய முறையாகவும் கருத படுகிறது.

ஆர்கானிக் எண்ணெய் வாயில் ஊற்றி வாயின் அனைத்து புறங்களிலும் படும் படி நன்கு கொப்பளிக்க வேண்டும். வாயினை நன்கு அசைவப்பதால் பற்களின் ஈறுகளிலும் சென்று நோய் தொற்றுகளிடம் இருந்து காப்பாற்றுகிறது. நன்கு கொப்பளித்த பின்னர் நீரினை கொண்டு வாயினை நன்கு கழுவ வேண்டும், அதன் பின்னர் நீரினை அருந்த குடல்கள் சுத்தம் ஆகும்.

சோடா :

சோடாவை பற்களில் பயன்படுத்தலாம், இது பற்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, கட்டுக்குள் வைக்கும். இதனை முதலில் பயன்படுத்தும் பொழுதே வாயில் ஏதேனும் எரிச்சல், வலிகள் உருவானால் உபயோகிப்பதை உடனே நிறுத்தி விடுங்கள் .

Share this story