Tamil Wealth

கைகளில் இருக்கும் கருமையை நீக்க வேண்டுமா ?

கைகளில் இருக்கும் கருமையை நீக்க வேண்டுமா ?

அதிகமான வெயிலின் தாக்கத்தினால் கைகளில் கருமை நிறம் உருவாகும், இதனை போக்க சில முறைகள் தெரிந்து கொள்ளுங்கள், செய்து பயன் பெறுங்கள்.

சர்க்கரை :

இனிப்பு சுவை கொண்ட சர்க்கரையை, வெயிலில் சென்று வந்த பிறகு கைகளை நன்கு கழுவ வேண்டும் இல்லையென்றால் சர்க்கரையை பாகு போன்று காய்ச்சி அதனை கைகளில் கருமை இருக்கும் இடத்தில் தேய்த்து வர கருமை மாறி வெண்மை நிறத்தை கொடுக்கும்.

எண்ணெய் :

வெயிலினால் உடலில் இருக்கும் வெப்பத்தினால் உருவாகும் கருமை நீங்க தேங்காய் எண்ணெயை கைகளில் நன்கு தேய்த்து உடலுக்கு குளிர்ச்சியை தந்து வெள்ளை நிறத்தை கொடுத்து பொலிவை கொடுக்கும்.

வெள்ளரி :

வெள்ளரிக்காயினை அரைத்து அதன் சாற்றினை கைகளில் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும் அதனுடன் தேன் அல்லது கடலை மாவு, எலும்பிச்சை கலந்தும் உபயோகிக்கலாம்.

உருளை :

உருளை கிழங்கை நன்கு வேக வைத்து நன்கு மசித்து கைகளில் கருமை இருக்கும் இடத்தில் பயன்டுத்துங்கள் நிற தோற்றத்தை காணலாம்.

Share this story