அழகுக்கே அழகு சேர்க்கணும் என்று எண்ணுபவர்களா?

பாதம் தினமும் சாப்பிடுங்கள் உடல் அழகை கூட்டும், மற்றும் இது அதிக சத்து மிக்கது.
அனைவருக்கும் தெரிந்தது குங்கும பூ, இதை தினமும் பாலில் கலந்து குடித்து வாருங்கள், கொஞ்சம் கொஞ்சமாக நிறம் அதிகரிப்பதை காணலாம்.
ஆரஞ்சு பழ தோலை தூற வீசாமல் இரவு தூங்கும் போது முகத்தில் தடவி விட்டு தூங்குங்கள். காலை எழுந்தவுடன் வெறும் தண்ணீரில் கழுவி வர அழகு பெரும் முகம்.
ஒரு நாளைக்கு நான்கு முறையாவது முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி முகத்தை சொர சொரப்பான துணியை வைத்து அழுத்தி தேய்க்காமல் மிருதுவான துணியை கொண்டு முகத்தை துடைக்க வேண்டும்.
சமையலுக்கு பயன்படும் உருளை கிழங்கை நம் முகத்திற்கும் பயன்படுத்தலாம். எப்படி தெரியுமா? உருளை கிழங்கை அவித்து பின் அதை நன்கு மசித்து முகத்தில் முழுமையாக தடவி இரண்டு மணி நேரம் கழித்து தண்ணீரை கொண்டு கழுவி வர முகம் அப்படி ஒரு அழகை இருக்கும்.