அடிக்கடி ஏற்படும் வலிகளால் பாதிப்புகள் உண்டாகுமா ?

சிலருக்கு உடலில் வலிகள் தினமும் அல்லது நீண்ட நேரத்திற்கு இருக்கும். இதனால் அவர்கள் தினம் அவஸ்தைக்கு உள்ளாகுகிறார்கள். காயங்களோ அல்லது உட்புற உறுப்புகளின் வலிகளோ அடிக்கடி ஏற்படுவதால் நமது உடலில் சில இன்னல்களை சந்திக்க நேரிடும்.
வலிகள் :
உடலில் ஏற்படும் வலிகள் கூர்மையாகவும் அல்லது அரிப்புகளையோ, எரிச்சலையோ உருவாக்கும். அதிகமாக ஏற்படும் வலிகள் மூட்டு வலிகள், முதுகு வலிகள், தலை வலி, இடுப்பு வலி, ஏதேனும் சிகிச்சைக்கு பிறகு உடலில் ஏற்படும் வலிகள் போன்றவை நீண்ட நாட்கள் இருக்கும்.
சிறிது வலி உருவாகும் அதனை நாம் அலர்ச்சியமாக கொஞ்சம் நேரத்தில் சரி ஆகி விடும் என்று நினைத்து விட்டுவிடுகிறோம். அந்த வலிகள் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் இருந்தால் உங்கள் நரம்புகள், எலும்புகள் பாதிக்க படும்.
உடலில் ஏற்படும் வலிகள் :
- எலும்புகள் மற்றும் தசைகளில் ஏற்படும் வலிகள், பிடிப்புகள்
- பிரசவ காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பையில் வலிகள்
- குடல்களில் ஏற்படும் தொற்றுகளால் குடல் வலி
- அதிக உடல் பருமனை கொண்டவர்களுக்கும் வலிகள் உருவாகும்
வலிகளை மறக்க சில செயல்களை செய்யலாம்:
- உடற்பயிற்சி செய்வது
- ஓவியம்
- நடனம்
- இனிமையான பாடல்களை கேட்பது
- யோகா
- மருத்துவரின் ஆலோசனை படி எடுத்து கொள்ளும் சிகிச்சை
உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு செயலை செய்ய உங்கள் வலிகள் மறைத்து போகும்.
வலிகளை போக்க உதவும் சில முறைகள் :
உடலில் ஏற்படும் வலிகளை குண படுத்த அதற்கென்று உருவாக்கப்பட்ட மருந்துகளை ஊசி போடுவதன் மூலமும் குறைக்கலாம்.
காயங்களால் ஏற்படும் வலிகளை போக்க அதற்கான அறுவைசிகிச்சை செய்வதன் மூலம் வலிகள் குறைந்து, காயங்கள் குணம் ஆகும்.
வலியை மறத்து போக செய்ய ஊசி போட்டு வலிகளை மூளைக்கு உணர்ச்சியை கொடுக்காமலும் வைக்கலாம்.
வலிகளை குண படுத்த உருவான திட்டம் :
ஒவ்வொருத்தருக்கும் ஏற்படும் வலிகளில் வித்தியாசம் இருக்கிறது . இதனை ஆராய்ந்து அவர்களுக்கான செய்ய வேண்டிய சிகிச்சையை நன்கு தெரிந்து செய்ய கொண்டு வந்ததே வலி மேலாண்மை திட்டம்.
இந்த திட்டத்தில் வலிகளால் பாதிக்க பட்டவர்களுக்கு உகந்த மருத்துவ முறைகள் மற்றும் சிகிச்சைகளை செய்கிறார்கள்.