Tamil Wealth

அமிலத்தன்மையால் கஷ்ட படுகிறீர்களா?

அமிலத்தன்மையால் கஷ்ட படுகிறீர்களா?

வயிற்றில் இருக்கும் அதிகப்படியான அமிலத்தன்மையை போக்கும் சில குறிப்புகள் தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்புகள் :

இஞ்சியில் இருக்கும் சத்துக்கள் நமக்கு ஏற்படும் அமிலத்தன்மையில்  இருந்து நம்மை விடுவிக்கும். இஞ்சி டீ அல்லது இஞ்சி சாற்றை குடிக்கலாம்.

அமிலத்தன்மையால் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளுக்கு குளிர்ந்த நீர் ஆகாரமான பால் அல்லது நீர் அருந்தலாம் மற்றும் பழ வகைகள் சாப்பிட  வேண்டும் என்று நினைத்தால் தர்பூசணி போன்ற நீர் சத்து அதிகம் இருக்கும் பழங்களை எடுத்து கொள்ளுங்கள்.

சாப்பிட உடனே தண்ணீர் அருந்துவதை தவிர்த்து அரை மணி நேரம் கழித்து அருந்துங்கள்.

தினம் காலை அல்லது அடிக்கடி துளசி இலைகளை சாப்பிடுவதால் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

அசிடிட்டி கோளாறுக்கு கிராம்பு உணவில் சேர்த்து கொள்ள அல்லது அப்படியே சாப்பிடவும் குணம் ஆகும்.

குளிர்பானங்களை தவிர்த்து இளநீரை குடித்து வரலாம் அல்லது தேன் எடுத்து கொள்ளவும் நல்ல பலன் கிடைக்கும்.

காலை எழுந்தவுடன் பல் துலக்கிய பின் காப்பிக்கு பதிலாக தண்ணீரை குடிக்க அசிடிட்டி பிரச்சனையே வராது.

Share this story