Tamil Wealth

நீங்கள் அடிக்கடி பாட்டு பாடுகிறீர்களா? அந்த பழக்கம் உங்களுக்கு கொடுக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

நீங்கள் அடிக்கடி பாட்டு பாடுகிறீர்களா? அந்த பழக்கம் உங்களுக்கு கொடுக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

தங்களின் பொழுதுபோக்கிற்கு என்று சிலர் எப்பொழுதும் பாடி கொண்டே இருப்பார்கள். சிலர் தங்கள் குரல் திறமையை வெளிக்காட்டும் வகையில் பாடுவார்கள் மற்றும் சிலர் குரலை கண்டுகொள்ளாமல் பாட வேண்டும் என்று எண்ணம் கொண்டு பாடுவார்கள்.

தூக்கம் பாதிப்பை போக்குமா ?

சிலருக்கு இரவில் தூங்கும் பொழுது குறட்டை ஏற்படும். இதனால் மற்றவர்களுக்கு தூக்கம் கெடும். இந்த குறட்டையை குறைக்க நாள்தோறும் ஒரு பாடலை பாட நல்ல பலனை கொடுக்கும் இதனால் வாயில் இருக்கும் தசைகள் பராமரிக்க படும் மற்றும் ஆஸ்துமா தொல்லை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

மன நிலையை மாற்றும் :

உங்களை மன நிலை சரி இல்லையா! சிந்தித்து சிந்தித்து மன கஷடத்தை உணர்கிறீர்களா! ஒரு பாட்டு பாடுங்க, உங்கள் மன நிலை மாறி சந்தோஷமான நிலையை பெறுவீர்கள். மன அழுத்தங்களை போக்கும், ஒரே சிந்தனையில் இருந்து தலை வலியை உண்டாக்காமல் நிதானமாக ஒரு பாட்டு பாட நல்லதே.

உடல் ஆரோக்கியம் :

பாட்டு பாடும் பொழுது வாய் தாடைகள் நன்கு அசைவதால் ரத்த ஓட்டங்கள் சீராக நடைபெறும் மற்றும் வாய்க்கு உகந்த உடற்பயிற்சியாகவும் கருத படுகிறது மற்றும் குரல் வளம் நன்கு அமையும். ரத்த ஓட்டம் சீராக அமைவதால் ரத்த சோகை மற்றும் நுரையீரலில் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளும்.

Share this story