தாமரை தண்டு பார்த்துருக்கிறீர்களா?
Sep 4, 2017, 13:35 IST

நம் தேசிய பூவான தாமரை பூவின் தண்டுகள் நமக்கு கொடுக்கு ஆரோக்கியம் யாருக்குமே தெரிவதில்லை. தண்டுகளும் அழகான பூவின் தோற்றத்தை போலவே காட்சி அளிக்க கூடியது.
தாமரை தண்டு நன்மைகள் :
- தாமரை தண்டை வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் நம் கண்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யும் மற்றும் கண்களுக்கு குளிர்ச்சியையும் தர கூடியது. பார்வை குறைபாடுகளையும் குண படுத்தும். தாமரை தண்டின் சாற்றை பாலுடன் அல்லது வெந்நீருடன் கலந்து குடிக்க சருமத்தில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் நல்ல மருந்து.
ரத்தத்தில் காண படும் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பயன்படும் வைட்டமின் பி-6 தாமரை தண்டில் உள்ளது.
- அடிக்கடி ஏற்படும் தலை வலி, பித்த நோய்கள், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு தாமரை தண்டை தினமும் எடுத்து கொள்ளலாம். இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ் அதிகம் காண படுவதால் தசைகளுக்கும், எலும்புகளுக்கும் வலிமையை கொடுத்து இதய கோளாறுகளில் இருந்தும் நம்மை தற்காத்து கொள்கிறது.