குளிர் பானங்கள் மற்றும் சோடாவை யாரெல்லாம் குடிக்க கூடாது என தெரியுமா?

குளிர் பானங்கள் மற்றும் சோடாவை யாரெல்லாம் குடிக்க கூடாது என தெரியுமா?

கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் அதிகப்படியான தண்ணீர் தாகத்தை சரி செய்ய குளிர்பானங்களை குடிப்பது பெரும்பாலானோரின் வழக்கமாக மாறி விட்டது. மேலும் சாப்பிட்ட பிறகு குளிர்பானத்தை குடித்தால் உணவு எளிதில் செரிமானம் ஆகும் என சிலர் நினைத்து இருப்பார்கள். அது முற்றிலும் தவறு இப்படி செய்வதன் மூலம் உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை ஏற்படுகிறது. இதை சாதரணமாக எந்த நோயும் பாதிக்காமல் இருப்பவர்கள் வரம்புடன் குடித்து கொள்ளலாம். சில உடல் ரீதியான பிரச்சனை இருப்பவர்கள் இதை குடித்தால் பல பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது.

குளிர் பானங்கள் மற்றும் சோடாவை குடிக்க கூடாதவர்கள்:-

  • உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் சோடா அல்லது குளிர்பானங்களை குடித்தால் அதில் உள்ள செயற்கை இனிப்பூட்டிகள் உடலில் அதிகப்படியான கொழுப்பை சேர்க்கிறது.
  • கர்ப்பிணி பெண்கள் மற்றும் கருத்தரிக்க விரும்புவோர் சோடா பானங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை கருவளத்தை பாதிக்கும்.
  • வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் வயது அதிகமானவர்கள் சோடா பானங்களை குடித்தால் உடல் ஆரோக்கியம் மோசமாகும்.

 

 

Share this story