வீட்டில் பணப்பெட்டி எங்கு வைக்க வேண்டும் என தெரியுமா?

ஒரு வீட்டின் செல்வ வளம் என்பது அந்த வீட்டின் பணப் பெட்டி வைக்கும் அறையை சார்ந்தே அமையும். வடக்கு மத்திய பகுதி குபேரனுக்கு உரிய அறையாகவே கருதப்படுகிறது. எனவே இந்த அறையில் பணப் பெட்டியை வைப்பது நல்லது. பணப்பெட்டி வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் தெற்கு திசையில் பணப் பெட்டியை வைக்கலாம். வட கிழக்கு அறையில் வைக்க நேரிட்டால் தென் மேற்கு மூலையில் பணப் பெட்டியை வைக்க வேண்டும். வட மேற்கு மூலையில் வைக்க நேரிட்டால் பணப் பெட்டியானது வடக்கு சுவரை தொடாத வண்ணம் இருக்க வேண்டும்.
தென் கிழக்கு அறையில் எந்த காரணம் கொண்டும் பணப் பெட்டியை வைக்க கூடாது. அப்படி இருந்தால் பணச் செலவுகள் அதிகமாக நேரிடும். அது மட்டுமில்லாமல் பணப் பெட்டி கனமாக இருப்பது அவசியம்.
பணப் பெட்டியானது அலமாரியில் வைப்பதாக இருந்தால் தெற்கு சுவரையோ அல்லது மேற்கு சுவரையோ தொடும் வண்ணம் வைக்க வேண்டும். பணப் பெட்டியை வைக்கும் அறையின் கதவு ஒற்றை படையில் இருப்பது மிகவும் நல்லது. பணமும் துணியும் ஒரே பெட்டியில் இருக்க கூடாது. மேலும் பணப் பெட்டியில் வாசனை திரவியங்களை வைக்க கூடாது. அது மட்டுமில்லாமல் பணப் பெட்டி உறுதியான ஒரு இடத்தில் நிறுத்த வேண்டும். பணப் பெட்டியை எப்போதும் காலியாக வைத்திருக்க கூடாது. அதனுள் ஒரு ரூபாய் அல்லது இரண்டு என எதாவது ஒன்று எப்போதும் இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் பணப் பெட்டி சுத்தமாக இருக்க வேண்டும்.