உலர்ந்த திராட்சையை சாப்பிடுவதால் என்ன பயன் தெரியுமா?

உலர்ந்த திராட்சையை சாப்பிடுவதால் என்ன பயன் தெரியுமா?

திராட்சை அனைவரும் சாப்பிடக் கூடிய ஒன்று தான். ஆனால் திராட்சையை காய வைத்து அதை பாயசத்திற்கோ அல்லது மற்றும் பிற உணவுகளிலோ சேர்க்கும் போது சிலர் அதை தவிர்ப்பார்கள். உலர்ந்த திராட்சையில் நிறைய நன்மைகள் உள்ளது. அதனை இப்போது பார்க்கலாம்.

உலர்ந்த திராட்சையை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்:-

நமது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் வேலையை கல்லீரல் செய்து கொண்டிருக்கிறது. அதன் வேலை சீராக இல்லை என்றால் நச்சுகளால் உடல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கல்லீரலில் நச்சு அதிகரிக்க முக்கிய காரணம் புகை மற்றும் மதுப் பழக்கம் தான். உலர்ந்த திராட்சையினை தொடர்ந்து சாப்பிடுவதால் கல்லீரல் மற்றும் ஈரலில் ஏற்படும் அலற்சியை குறைக்கிறது. உலர் திராட்சையை கல்லீரல் செயல்பாட்டுக்கு பயன்படுத்தும் முறையை இப்போது பார்க்கலாம்.

ஒரு பாத்திரம் நிறைய உலர்ந்த திராட்சை மற்றும் தண்ணீரை 1 : 6 என்ற விகிதத்தில் ஊற்றி கொள்ள வேண்டும். அதாவது 1 டம்ளர் உலர் திராட்சை எடுத்து கொண்டால் 6 டம்ளர் நீர் சேர்க்க வேண்டும். பின்னர் இந்த கலவையை சிறிது நேரம் சூடாக்கி கொள்ள வேண்டும். இந்த கலவையை மூடி அப்படியே வைத்து கொள்ள வேண்டும்.

மறுநாள் காலையில் எழுந்த உடன் தயாரித்து வைக்கப்பட்ட நீரை குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் கல்லீரலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்படும். இந்த நீரை அருந்தி வரும் காலக் கட்டத்தில் பாஸ்ட் புட் உணவுகளை கட்டாயம் தவிக்க வேண்டும். மேலும் ஆல்கஹால் மற்றும் மது போன்றவையும் அருந்த கூடாது.

Share this story