தேன் எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா?

தேன் எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா?

தேன் எளிதாக கிடைக்க கூடிய ஒரு மருந்து பொருள் தான். ஆனால் இதில் அதிகப்படியான கலப்படம் இருக்கிறது, எனவே ஏமாறாமல் சந்தைகளில் சுத்தமான தேனை வாங்கி கொள்ள வேண்டும். சுத்தமான தேனை பருகினால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

தேனின் நன்மைகள்:-

  • ஆரஞ்சு தோலின் பொடி, சர்க்கரை, தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் கலந்து முகத்தில் பூசி வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும். சருமம் புத்துணர்ச்சியுடனும், ஈரப்பதமாகவும் இருக்க உதவுகிறது.
  • மிளகு பொடி, தேன், எலுமிச்சை சாறு ஆகியவற்றை இதமான நீரில் கலந்து தினமும் இருமுறை குடித்தால் போதும் சைனஸ் பிரச்சனையை முழுவதுமாக விரட்டலாம்.
  • வெயிலில் சுற்றி திரிவதனால் உங்கள் முகம் கருப்பாகி விட்டதா அதை வெள்ளையாக்க எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து கழுவினால் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் மிருதுவாகும்.
  • அன்னாசி பழச்சாறுடன் தேன் கலந்து ஒரு மாத காலத்திற்கு சாப்பிட்டால் தலைவலி, பல்வலி, கண், காது, தொண்டை சம்மந்தபட்ட நோய்கள் வராது.
  • பட்டை, ஆலிவ் எண்ணெய், தேன் மூன்றையும் கலந்து தலைமுடியின் அடி வரையிலும் படுமாறு தேய்த்து 20 நிமிடம் கழித்து நன்கு காய்ந்த பின்பு அலசினால் வழுக்கை தலையில் முடி வளர ஆரம்பிக்கும்.

Share this story