வெறும் வயிற்றில் கேரட் ஜூஸுடன் இஞ்சி சாறு கலந்து குடித்தால் உடலில் ஏற்படும் அதிசயங்கள் பற்றி தெரியுமா?

வெறும் வயிற்றில் கேரட் ஜூஸுடன் இஞ்சி சாறு கலந்து குடித்தால் உடலில் ஏற்படும் அதிசயங்கள் பற்றி தெரியுமா?

ஒவ்வொருவரும் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர். செயற்கை வழியை காட்டிலும் இயற்கையான முறைகளை பின்பற்றினால் எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது. மேலும் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. அந்த வகையில் கேரட் ஜூஸுடன் இஞ்சி சாறை கலந்து குடித்தால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

கேரட் + இஞ்சி கலந்த பானம் தயாரிக்கும் முறை:-

கேரட்டை சிறிது சிறிது துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சியை துறுவலாக மாற்றி தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டினால் போதும். ஜூஸ் தயார்.
• கண் பார்வை குறைபாடு இருந்தால் கேரட் ஜூஸில் இஞ்சி சாறு கலந்து குடித்து வந்தால் பார்வை நரம்புகள் வலிமையடைவதுடன் கண் பார்வை சீராகும்.
• இந்த ஜூஸில் உள்ள அதிக அளவிலான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் புற்றுநோயின் தாக்கத்தை வெகுவாக குறைக்கிறது.
• உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழித்து உடலில் நோய் எதுவும் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
• இந்த ஜூஸை தொடர்ச்சியாக குடித்து வந்தால் தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது.
• இஞ்சி மற்றும் கேரட்டின்  ஜூஸ் கலந்த கலவை உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
• பற்கள் மற்றும் ஈறுகள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாப்பதுடன் வாய் தூர்நாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது.

Share this story