Tamil Wealth

நுங்குவின் சிறப்புகள் தெரியுமா???

நுங்குவின் சிறப்புகள் தெரியுமா???

நுங்குவின் உள் இருக்கும் கெட்டி தன்மை கொண்ட , உண்ண கூடிய பகுதியில் அடங்கி இருக்கும் சத்துக்கள் கொடுக்கும் நன்மைகள் அதிகம். கோடைகாலங்களில் அதிகம் கிடைக்கும் இது கொடுக்கும் மருத்துவம் யாருக்கும் தெரிவதே இல்லை.

நுங்குவின் சிறப்புகள் :

நுங்கு கோடைகாலங்களில் அதிகம் பயனை தர கூடியது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். இன்று பனை மரங்கள் அதிகம் காண படுவதே இல்லை. கிடைப்பதே அரிது தான். அம்மை நோயால் பாதிக்கபட்டவர்கள் நுங்கு சாப்பிட நல்லது.

நுங்கில் சதை பற்றை மட்டும் சாப்பிடாமல் அதன் தோலையும் சேர்த்து உண்ண அதில் இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் அனைத்தும் கிடைக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும்.
பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் நுங்கு கல்லீரலை பாதுகாத்து ரத்தத்தை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இதன் சாற்றில் இருக்கும் நீர் சத்துக்கள் உடலுக்கு குளிர்ச்சி மற்றும் புது உற்சாகத்தை கொடுக்கும். கோடைகாலங்களில் இதை தினம் ஒன்று எடுத்து கொள்ளுங்கள் நல்லது.

 

Share this story