வெள்ளை முடி வர காரணம் தெரியுமா?

வெள்ளை முடி வர காரணம் தெரியுமா?

வெள்ளை முடி வர காரணம் தலை  முடியை சரியாக பராமரிக்காமல் விட்டதே. இன்றைய இளைஞர்களுக்கு வெள்ளை முடி பிரச்சனை பெரிய பிரச்சனை, இதனாலே மன குழப்பத்திற்கும், மன உடைதலுக்கும் ஆளாகுகிறார்கள்.

காரணங்கள் :

சரியான  உணவு பழக்கவழக்கம் இன்றி இருப்பதே. சரியான ஊட்ட சத்துக்கள் கிடைக்காமல் தலை முடி வெண்மை நிறத்தில் மாற ஆரம்பிக்கும்.

உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் வளர்ச்சி குறைந்தாலோ அல்லது ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டாலோ வெள்ளை முடி வரும்.

மோசமான உணவு பழக்கங்களும் இதற்கு காரணமே. அதிகமான வேதி பொருட்கள் இருக்கும் ஷாம்பு மற்றும் இதர பொருட்களை பயன்படுத்துவதால் தலை முடி பாதிக்கப்பட்டு நரை முடி வருகிறது.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகம் இருக்கும் உணவுகளை உண்பதால் அது முடிகளை பாதித்து கருமை நிறத்தை மாற்றி வெண்மை நிறத்தை கொடுக்கிறது மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பும்  இருக்கிறது.

வைட்டமின்கள் மற்றும் ஊட்ட சத்துக்களின் குறைபாடினாலே முடிகளில் அதிக பாதிப்புகள், வெடிப்புகள் ஏற்பட்டு பிரச்சனை வருகிறது.

முடி வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி12 உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள் .

Share this story