சருமத்தை பொலிவாக வைத்து கொள்ள உதவும் பொடி தெரியுமா?

சருமத்தில் உண்டாகும் பருக்கள், கருமை நிறத்தை போக்கவும் மற்றும் எண்ணெய் கசடுகளால் ஏற்படும் கோளாறுகளை போக்கவும் பயன் உள்ளதாக இருப்பது மஞ்சள் பொடி.
மஞ்சள் பொடி மட்டுமே கொண்டு சருமத்தில் ஏற்படும் அனைத்து கோளாறுகளையும் போக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடியுமா, அதற்கு பயன்பட கூடியதே இந்த மஞ்சள். அதிக செலவு செய்ய வேண்டாம், மிகவும் எளிதான முறையில் உபயோகித்து சருமத்தை அழகு படுத்தலாம்.
காயங்கள் :
கால்கள் மற்றும் கைகளில் ஏற்படும் காயங்களை குண படுத்தவும் மற்றும் சருமத்தில் உண்டாகும் பருக்களை போக்கவும் மஞ்சள் பொடிகளை பயன்படுத்தலாம். காயங்களால் ஏற்படும் தழும்புகள், வீக்கத்தை குறைக்க மஞ்சளில் இருக்கும் ஆன்டிசெப்டிக் மிகவும் உறுதுணையாக இருக்கிறது.
அடிபட்ட இடங்களில் உடனே மஞ்சளுடன் தேங்காய் எண்ணெய் கலந்து வைத்தால் ரத்த கசிவுகள் நிறுத்த பட்டு. அதில் இருக்கும் கிருமிகள் அழிந்து அதனால் எவ்வித பாதிப்புகளும் வராமல் நம்மை பாதுகாத்து கொள்ளும்.
செய்முறை :
மஞ்சளுடன் கடலை மாவு கலந்து பேஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். இதனை தினம் உங்கள் சருமத்தில் பயன்படுத்தி வர ஒரு வாரத்திற்குள் நல்ல மாற்றத்தை காணலாம். இதனை முகத்திற்கு பயன்படுத்திய பின்னர் வெறும் நீரினை கொண்டு கழுவ வேண்டும். இந்த கலவையுடன் ரோஸ் வாட்டர் கலந்து உபயோகிக்க விரைவில் நிறம் அதிகரிக்கும்.
இளமை தோற்றம் :
உடலில் ஏற்படும் வயது முதிர்ந்த தோற்றத்தை தடுக்க மஞ்சளில் இருக்கும் நிறமிகள் உடலில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட்டை அதிகரிக்க செய்து சருமத்தை பராமரிக்கிறது. வயதானதால் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள், முகம் இழந்த பொலிவை மறுபடியும் கொடுத்து உங்களை அழகாக வைத்து கொள்ள மஞ்சளில் இருக்கும் கர்குமினாய்டு உதவுகிறது.
மஞ்சளுடன் குங்கம பூவை கலந்து சருமத்தில் பயன்படுத்த கருமை திட்டுகள் மறைந்து அதனால் ஏற்படும் தழும்புகளும் மறைந்து பொலிவான சருமத்தை கொடுக்கும்.
செய்முறை :
ஒரு குவளையில் பாதியளவு பாலை எடுத்து கொண்டு அதனுடன் மஞ்சள் பொடியையே முக்கியமாக கஸ்தூரி மஞ்சள் நல்ல பலனை தரும் என்பதால் அதனை கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை தினம் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தி காய்ந்த பின்னர் நீரினை கொண்டு கழுவி வர நீங்கள் கூடுதல் அழகை பெறலாம் மற்றும் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும்.