அழகை பாதிக்கும் பொருட்கள் தெரியுமா?
Sep 12, 2017, 12:45 IST

முகத்திற்கு என்று உருவாக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதே நல்லது. மற்ற எந்த பொருட்களை பயன்படுத்தினாலும் அதில் முகத்தில் ஒவ்வாமை பிரச்சனையால் விளைவுகளை ஏற்படுத்தும்.
பொருட்கள் :
- உடலிற்கு பயன்படுத்தும் கிரீம்கள், தலைக்கு பயன்படுத்தும் கிரீம்கள் போன்றவைகளை முகத்திற்கு பயன்படுத்த கூடாது. ஏனென்றால் அனைத்து சருமங்களும் ஒன்று அல்ல. சருமத்தின் மாற்றங்களுக்கே வித விதமான கிரீம்கள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.
- முடிகளின் பராமரிப்புக்கு உதவும் ஷாம்பு போன்ற வேதிப்பொருட்களை முகத்திற்கு பயன்படுத்தவே கூடாது. அது முடிகளின் வளர்ச்சிக்கு என்று தனியே தயாரிக்க பட்டது.
- வினிகர் அனைவரும் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று. இதை முகத்திற்கும் பயன்படுத்தலாம், ஆனால் அளவுக்கு அதிகமாக உபயோகிக்க வேண்டாம் அது ஒரு விதமான அரிப்பை ஏற்படுத்தும் மற்றும் தழும்புகள், கொப்பளங்கள் வரலாம்.
- தலை முடிக்கு பயன்படுத்தும் ஸ்ப்ரே. முகத்திற்கு பயன்படுத்தினால் சருமத்தை வறட்சி ஆக்கி முக தோற்றத்தையே மாற்றி என்றும் சோர்வான நிலையை கொடுக்கும்.
- அதிக வேதி பொருட்கள் அடங்கி இருக்கும் க்ரீம்களை முகத்திற்கு
பயன்படுத்துவதை தவிர்த்து, குறைந்த அளவிலே பயன்படுத்துங்கள் அதுவே சருமத்திற்கு நல்லது.