Tamil Wealth

தினம் நடைபயிற்சியை மேற்கொள்ள நமக்கு கொடுக்கும் ஆரோக்கியம் தெரியுமா உங்களுக்கு!

தினம் நடைபயிற்சியை மேற்கொள்ள நமக்கு கொடுக்கும் ஆரோக்கியம் தெரியுமா உங்களுக்கு!

தினமும் காலை செய்யும் நடைப்பயிற்சி நமக்கு எவ்வளவு நன்மைகளை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா, தெரிந்து கொள்ளுங்கள், நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

புத்துணர்ச்சி :

காலை செய்யும் நடைப்பயிற்சி அன்றைய நாளையே சீராக அமைய செய்கிறது. அன்று நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன், சுறு சுறுப்பான சூழ்நிலையை கொடுக்கும். அந்த நாள் முழுவதும் நீங்கள் மிக உற்சாகத்துடன் ஒவ்வொரு வேலையையும் செய்வீர்கள். தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள்.

நடைப்பயிற்சி சூழ்நிலை :

காலை வேளையில் இருக்கும் அந்த சூழ்நிலையில் நாம் நடைப்பயிற்சி மேற்கொள்ள, மரங்கள் வெளிவிடும் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்கிறோம் மற்றும் சூரியனின் மிதமான வெப்பம் உடலில் இருக்கும் செல்களை புதுப்பிக்கிறது. சீரான நடைப்பயிற்சி உடலை சீராக வைக்க உதவுகிறது. மன அழுத்தங்களை குறைத்து, உடல் எடையையும் குறைக்கும்.

நடந்துக்கிட்டே யோசிக்கிறீங்களா ?

சிலர் டென்ஷன் வந்தால் நடந்து கொண்டே யோசிப்பார்கள், நல்ல முடிவையும் எடுப்பார்கள், இதற்கு காரணம் நாம் இயங்கி கொண்டிருக்கும் பொழுது நமது மூளை சிறப்பாக செயல் பட்டு, சிந்தனையை தூண்டி நல்ல தீர்வை எடுக்க உறுதுணையாக இருக்கிறது.

எடை குறையும் :

உடற்பயிற்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் மேற்கொள்ளுங்கள், உடலை எப்பொழுதும் கட்டுக்கோப்பாகவும் மற்றும் நோய் தொற்றுகளிடம் இருந்து பாதுக்காக்கிறது. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நடைப்பயிற்சி செய்வதின் மூலம் சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

எலும்புகளின் வலிமை :

வயது முதிர்ச்சியால் ஏற்படும் மூட்டு வலி, முதுகு வலி போன்றவைகளுக்கு தினமும் காலை சிறிது நேரங்கள் நடக்க நல்ல பலனை தரும் மற்றும் எலும்புகளுக்கு உறுதியை கொடுத்து, எலும்புகளில் எவ்வித கோளாறுகளையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்கும்.

Share this story