Tamil Wealth

தயிரில் இருக்கும் ஆரோக்கியம் தெரியுமா??

தயிரில் இருக்கும் ஆரோக்கியம் தெரியுமா??

தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும். கெட்டியான குளிர்ச்சி தன்மை கொண்ட தயிரை உணவில் சேர்த்து கொள்ள நமக்கு கிடைக்கும் நன்மைகள் அதிகம்.

தயிரை சாதத்துடன் சேர்த்து பிணைந்து சாப்பிட வயிற்று போக்கு ஏற்படாமல் பாதுகாக்கும். அசைவ உணவுகளை உண்ட பின் தயிரை குடிக்க அதில் புளிப்பு சுவையுடன் இருக்கும் பாக்டீரியா நல்ல செரிமானத்தை கொடுக்கும். தயிரை உதடுகளில் தடவி வர உதடுகள் சிவப்பழகை பெறுவதோடு மட்டுமல்லாமல் உதடுகளில் வெடிப்புகள் வராமலும் தடுக்கும்.

நரம்பியல் பாதிப்புகளுக்கும் தயிர் நல்ல பலனை கொடுக்கும். இதில் இருக்கும் கால்சியம், வைட்டமின்கள், புரத சத்துக்கள் அனைத்தும் எலும்புகளை வலு பெற செய்கிறது. தயிரை தினமும் உணவில் எடுத்து கொள்ள நமக்கு அல்சர் பிரச்சனையே வராது.

சரும பிரச்சனைக்கும், வீக்கம் மற்றும் ரத்த கட்டுதலுக்கும் தயிரை கொண்டு இறுக்கமாக கட்டிவிட விரைவில் குணம் ஆகும்.

புற ஊதா கதிர்களின் பாதிக்கப்படும் தோல் வியாதிகளுக்கு தயிர் நல்ல அரு மருந்து.

Share this story