பிஸ்தா கொடுக்கும் ஆரோக்கியம் தெரியுமா????

முகத்தை பொலிவுடன் வைத்து கொள்ள பிஸ்தாவை பயன்படுத்த முகம் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் காணப்படும். வயதான பிறகு ஏற்படும் சுருக்கங்கள், வறட்சியை போக்கி சருமத்திற்கு நல்ல வழு வழுப்பான தன்மையை கொடுக்கும். அடிக்கிற வெயிலில் ஏற்படும் கருமை நிறத்தை நீக்கி வெள்ளையான சருமத்தை பெற வேண்டுமா தினம் ஒரு பிஸ்தா சாப்பிடுங்கள். வைட்டமின் ஈ அதிகம் இருக்கும் பிஸ்தாவை சாப்பிட நல்ல கொழுப்புகள் உடலில் சேர்ந்து ஆரோக்கியத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் புற்று நோயில் இருந்து காத்துக்கொள்ளும்.
மூளையின் செயல் பாடுகளை நல்ல முறையில் செயல் பட செய்யும். அதற்கான சுரப்பிகளை சீராக சுரக்க செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து திறம்பட செயல் படுகிறது.
வயதானவர்களுக்கு ஏற்படும் சருமத்தை போக்கி இளமையான தோற்றத்தை கொடுக்கும் மற்றும் நோய் தொற்றுகளிடமும் இருந்து நம்மை பராமரிக்கும் தன்மை கொண்டது தான் பிஸ்தா.
கண் கோளாறுகளுக்கு பிஸ்தா நல்ல பலனை கொடுக்கும். முடி வளர்ச்சி குறைவாக காணப்படுவோர், முடி தளர்ச்சி போன்ற அனைத்து பிரச்சனைக்கும் நல்ல தீர்வை கொடுக்கும். வைட்டமின் பி6 ரத்தத்தின் சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளையணுக்கள் அதிகரிக்கும்.