Tamil Wealth

சீம்பால் பற்றிய உண்மைகள் தெரியுமா உங்களுக்கு? தெரிந்து கொண்டு சாப்பிடலாம்!

சீம்பால் பற்றிய உண்மைகள் தெரியுமா உங்களுக்கு? தெரிந்து கொண்டு சாப்பிடலாம்!

நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் மற்றும் அதிக ஊட்ட சத்துக்களையும் மொண்டு உள்ள இந்த சீம்பாலை, மாடு கன்று ஈன்ற பின்னரே கிடைக்கும். இதனை கொண்டு பால்கோவா செய்து சாப்பிடலாம் மற்றும் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் ஆராயத்தை பற்றி பார்க்கலாம்.

சீம்பால் :

  • சீம்பாலை கணக்கிடும் பொழுது மற்ற பால்களில் இருக்கும் ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் அதிகமே. இதனை நாம் குடிக்க நமக்கு கிடைக்கும் பயன்கள் தெரிந்து கொள்வோம்.
  • மலச்சிக்கல் பிரச்சனைகளை எளிதில் சரி செய்யும் ஒரு அற்புத மருந்து தான் சீம்பால்.
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சீம்பாலுடன் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கொடுக்க சுவை மிக்கதாக இருக்கும்.

ஆரோக்கியமும் மற்றும் சரும பராமரிப்பும் கொடுக்கும் சீம்பால் :

சீம்பாலில் இருக்கும் புரதம், வைட்டமின்கள், கால்சியம் போன்றவை அடங்கி இருப்பதால் வயதானவர்கள் அதிகம் அருந்த அவர்களின் முகத்தில் உண்டாகும் சுருக்கங்கள், கோடுகள் மறைந்து இளமையான தோற்றத்தை தரும். அவர்களுக்கு வயது முதிர்ச்சியால் ஏற்படும் மூட்டு வலிகள் மற்றும் எலும்புகளில் ஏற்படும் கோளாறுகள், கால்சியம் குறைபாடுகள் வரும் நோய்களை தடுக்க, உடல் சோர்வை போக்கும் விதமாக சீம்பாலை அருந்தலாம்.

நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவும் :

அதிக வேலை பளு செய்பவர்கள், விளையாட்டு வீராங்கனைகள் சீம்பாலை அருந்த அவர்களின் செயல் திறனுக்கு உறுதுணையாக இருக்கும் மற்றும் கடின உணவுகளை உண்ட பின்னர் அவைகளை செரிக்க உதவும் வகையில் இது பயன்படுகிறது, விரைவில் உணவுகள் செரிமான அடைந்து நீண்ட நேரம் உழைப்புக்கு உதவுகிறது.

 

Share this story