அலுவலுகங்கள் மற்றும் கடைகளில் வாசல் படி மற்றும் கதவுகளை அமைக்கும் முறை பற்றி தெரியுமா?

அலுவலுகங்கள் மற்றும் கடைகளில் வாசல் படி மற்றும் கதவுகளை அமைக்கும் முறை பற்றி தெரியுமா?

புதியதாக வாங்கிய கடை அல்லது அலுவலகத்தில் எதிர்பார்த்த லாபம் எதுவுமே இல்லை என்று சொல்லி திரிபவர்கள் பலர். இதற்கு அந்த கடைகளில் அமையப் பெற்றுள்ள வாசற்படி கூட காரணமாக அமையும். வாசற்படியானது முறையான திசையில் அமையப் பெற்றால் வாஸ்து பகவான் எல்லா நற்பலன்களையும் அள்ளி தருவார்.

அலுவலுகங்கள் மற்றும் கடைகளில் வாசல் படி மற்றும் கதவுகளை அமைக்கும் முறை:-

பொதுவாக எல்லா கடைகளிலும் வாசற்படியானது கடையின் முழு அகலத்திற்கு அமைப்பது தான் வழக்கம். அப்படி அமைப்பதில் தவறு ஒன்றும் இல்லை. கிழக்கு பார்த்த கடைகளில் வாசல் படியானது வடகிழக்கு மூலையில் அமைய வேண்டும்.  மேற்கு பார்த்த கடைகளில் படியானது வட மேற்கில் அமைவது நல்லது.

வடக்கு தென் மேற்கில் வாசல் படி அமைத்தல் மிகவும் நல்ல பலனை தரும். மேற்கு பார்த்த கடைகளில் தெற்கு திசையில் உள்ள கடைகளில் தென்கிழக்கு மூலையில் வாசற்படிகளை அமைக்கலாம். கிழக்கு பார்த்த  கடைகளில்  மாடலாக படி அமைப்பதாக கருதி அரை வட்ட வடிவமுள்ள படிகளை அமைக்க கூடாது.

Share this story