Tamil Wealth

பருக்கள் வர காரணம் தெரியுமா?

பருக்கள் வர காரணம் தெரியுமா?
பருக்கள் வருவதற்கு காரணமே நாம் அதிகம் உட்கொள்ளும் எண்ணெய் உணவுகள் மற்றும் முகத்தை நாம் ஒழுங்கான முறையில் பராமரிக்காமல் இருப்பதே.

காரணம் :

பருக்கள் வர முக்கிய காரணமே நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் எண்ணிக்கையே. இதன் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க முகத்தில் பல மாற்றங்களை காணலாம். அதில் ஒன்று தான் பருக்கள்.

பருக்களை கைகளை கொண்டு தொந்தரவு செய்ய கூடாது. அது முகத்தின் மற்ற இடங்களிலும் பரவி தொற்றை ஏற்படுத்தும். பருக்கள் வர ஒரு காரணமாக அமைவது நம் மன அழுத்தங்கள், மன உளைச்சல் போன்றவை.

தினமும் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும், இல்லையென்றால் முக பருக்கள் வர வாய்ப்பு உள்ளது. தண்ணீரை கொண்டு முகத்தை தினம் நான்கு முறை கழுவ வேண்டும். அது முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்கை நீக்கும்.

நாம் முகத்திற்கு பயன்படுத்தும் துணிகளின் சுத்தம் மிக முக்கியம். அதில் இருக்கும் கிருமிகள் மூலம் முகத்தில் பருக்கள் போன்ற கோளாறுகள் வரும்.

 

Share this story