Tamil Wealth

உங்களுக்கு முடி உதிர்வுக்கான காரணம் தெரியுமா?

உங்களுக்கு முடி உதிர்வுக்கான காரணம் தெரியுமா?
முடி உதிர்வதற்கான பல காரணங்கள் இருக்கிறது, அதில் சில சமயம் நாம் செய்யும் தவறுதான் காரணமாகிறது. அவற்றை இப்போது பார்க்கலாம்.

இறுக்கமான தலைமுடி பின்னலுடன் தூங்குவது. இப்படி செய்வதால் இரத்த ஓட்டம் குறைந்து முடி வலுவிழக்கிறது.

பகலில் வெளியில் அலைந்து விட்டு வருபவர்களுக்கு குளித்தால் மட்டும் தான் தூக்கம் வரும். அப்படி குளித்து விட்டு வரும் போது தலைமுடியை நன்றாக காய வைக்க வேண்டும். இது அதிகளவில் முடி வலுவை குறைக்கிறது.

பருத்தியாலான தலையணைகள் இன்னொரு முக்கிய காரணம் ஆகும். இது தலைமுடியில் உள்ள எண்ணெயை உறிஞ்சிவிடுகிறது. இதனால் தலைமுடி வறண்டு பிளவுகள் உண்டாகிறது.

தலைமுடியை தூங்குவதற்கு முன் ஷவர் மூலம் கவர் செய்த பின் தூங்கினால் முடி உதிர்வது குறையும்.

பொதுவாக இரவு நேரங்களில் செல்கள் வளரும். அதனால் இந்த சமயத்தில் தலை வாரினால் இரத்த ஓட்டம் சென்று கூந்தல் வலுவாகும். முடி உதிர்வு குறையும்.

Share this story