பொடுதலை தாவரம் தெரியுமா?

பொடுகுதலை தாவரத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் :
பொடுகுதலையை இலைகளின் முக்கிய பங்கே முடி வளர்ச்சி மற்றும் வெடிப்புகளை குண படுத்தவே பயன்படுகிறது.சூரியனின் வெப்பத்தினால் உடலில் ஏற்படும் அதிகமான சூட்டினால் தலையில் வரும் பொடுகு தொல்லையில் இருந்து விடு பட பொடுதலை இலைகளை வேக வைத்து நன்கு அரைத்து சாப்பிட பலன் கிடைக்கும்.
தொடர் இருமலை குண படுத்த இதனை நன்கு காய்ச்சி நீரை மட்டும் அருந்த வேண்டும்.
காயங்களால் ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் நீர் கட்டுதல் போன்ற பிரச்சனைக்கு இதன் இலைகளை அரைத்து தொடர்ந்து பயன்படுத்த நாளடைவில் குணம் ஆகும் சருமமும் பழைய நிலைக்கு திரும்பும்.
சிறுநீரக கோளாறுகள் நீங்கி அதனால் வரக்கூடிய பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் நம்மை பாதுகாக்கும்.
முடி கொட்டுதல், கருமையான முடி வளர்ச்சி போன்றவற்றிக்கு பொடுதலை மிகவும் பயன் உள்ளது.
பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி, கை, கால் வழிகளை குண படுத்தும் மருத்துவ குணங்கள் பொடுதலை இலையில் அடங்கி உள்ளன.