வெங்காயத்தின் தோலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

வெங்காயத்தின்  தோலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

எந்த ஒரு சமையலாக இருந்தாலும் அதில் இடம் பெற்றிருப்பது வெங்காயம் மட்டும் தான். வெங்காயத்தை பலரும் விரும்புவதில்லை அதில் உள்ள வாசனை தொடர்ந்து வாயில் இருந்து கொண்டிருப்பது தான் இதற்கு காரணம். இதன் சுவை மற்ற எல்லாவற்றிலுமிருந்து வித்தியாசமானது. வெங்காயத்தில் மட்டுமில்லை அதன் தோலை சாப்பிட்டாலும் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன அதை இப்போது பார்க்கலாம்.

வெங்காயத்தின்  தோலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:-

  • வெங்காயத்தின் தோலில் உள்ள நிறமிகள் இரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் தமனிகளில் ஏற்படும் அடைப்பை சரி செய்யவும் செய்கிறது.
  • இதில் உள்ள அதிகப்படியான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் புற்றுநோய்க்கு காரணமான செல்களை அழிப்பதோடு புற்று நோய் வராமலும் தடுக்கிறது.
  • இதன் தோலில் உள்ள கரையாத நார்ச்சத்துகள் குடலின் செயல்பாட்டை சீராக்கி குடல் சம்மந்தமான பிரச்சனை வராமல் தடுக்கிறது. மேலும் குடலில் தங்கியுள்ள தேவையற்ற கிருமிகளை அழிக்கிறது.
  • இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்கள் உடல் எடையை குறைக்கவும் முடியும்.

வெங்காயத்தின் தோலினை அப்படியே சாப்பிடாமல் அதை சூப் வைத்தோ அல்லது தேநீர் தயாரித்தோ குடிக்கலாம். தேநீர் தயாரிப்பதற்கு வெங்காயத்தின் தோலை நீர் ஊற்றி 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் போதும். இந்த தேநீரை கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உபயோகிக்க கூடாது.

Share this story