லிச்சி பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

லிச்சி பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

லிச்சி பழத்தை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. கோடைக் காலத்தில் வட இந்தியாவில் அதிகமாக கிடைக்கும். இதன் பூர்வீகம் சீனா மற்றும் வங்கதேசம் தான். இந்த பழத்தின் தோல் பிங்க் நிறத்திலும் முட்டை வடிவிலும் இருக்கும். லிச்சி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

லிச்சி பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்:-

  • லிச்சி பழம் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துகளை கொண்டுள்ளது. எனவே இதை சாப்பிடுவதால் உடலின் செரிமானம் சீராகி வயிறு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கப்படும்.
  • லிச்சிப் பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவு எனவே இதை சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக குறையும். மேலும் பசி ஏற்படாமல் இருக்கும்.
  • இந்த பழத்தில் உள்ள அதிகப்படியான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது மட்டுமில்லாமல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
  • தொடந்து லிச்சி பழத்தினை சாப்பிடுவதன் மூலம் கண்களில் ஏற்படும் கண்புரை தடுக்கப்படுகிறது. மேலும் இதய நோய்கள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள முடியும்.
  • இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின்கள் உடலில் நோய்கிருமிகளின் தாக்கத்தை குறைத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமை ஆக்குகிறது.
  • உடலில் உள்ள இரத்த சிகப்பனுக்களின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சோகை ஏற்படுவதை குறைக்கும். மேலும் உடலில் இரும்பு சத்தை அதிகரிக்கவும் லிச்சி பழம் உதவுகிறது.

Share this story