தினம் ஒரு மாதுளை சாப்பிட்டால் கிடைக்கும் பலன் என்ன தெரியுமா?

மாதுளை பழம் சாப்பிட்டால் கிடைக்கும் பலன்:
மாதுளை பழம் சாப்பிடுவதால் பலதரப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அவற்றை பின்வருமாறு பார்க்கலாம். மாதுளை மரத்தில் உள்ள அதன் மொட்டை தொடர்ந்து மூன்று நாள்கள் சாப்பிடுவதால் கண்ணில் வலி, நீர் வடிதல், கண்ணின் நிறம் சிவப்பாக மாறுதல், போன்ற கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏதும் ஒரு வருட காலத்திற்கு வராது.
இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு, மற்றும் அதில் உள்ள கரைகளை நீக்குகிறது. இதன் மூலம் இரத்த ஓட்டம் சீராகும். இரத்ததை சுத்தப் படுத்த உதவுகிறது. உடம்பில் உள்ள இரத்ததின் அளவை அதிகமாக்க பயன்படுகிறது.
உடம்பில் ஏற்படும் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சரி செய்கிறது. உணவு செரிக்க உதவுகிறது. உடம்பில் ஏற்படுகின்ற வீக்கம், கை, கால்களில் ஏற்படும் வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
உடலை ஆரோக்கியமாகவும், முகத்தை பளபளபாக்கி கொள்ளவும் இது உதவுகிறது. நெஞ்சுவலி ஏற்படும் போது இதனை சாப்பிட்டால் நல்ல பயனை தரும். குரல்வளம் மென்மை அடைய இதை சாப்பிட்டாலே போதுமானது.