சோம்பை பயன்படுத்தி கிடைக்கும் நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?
Thu, 14 Sep 2017

சோம்பை நம்மில் பலரும் உபயோகப்படுத்தி இருக்க மாட்டோம். ஆனால் அதில் பல விதமான நன்மைகள் அடங்கியுள்ளன. இதை பயன்படுத்தி கிடைக்கும் தேநீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
- உடலின் பல்வேறு இடங்களில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் அழுத்தத்தை குறைக்க வேண்டுமெனில் சோம்பு டீ குடித்தால் போதும்.
- இரைப்பை மற்றும் வயிறு செரிமான பிரச்சனை போன்றவை ஏற்படாமல் இருக்க சோம்பு நீரை குடித்தால் போதுமானது. வயிற்று உப்பிசம் மற்றும் வாயுத்தொல்லையை சரி செய்ய இது உதவுகிறது.
- சிறுநீரகத்தில் ஏற்படும் நச்சு தன்மையை சரி செய்ய இது உதவுகிறது. மேலும் சோம்பு நீரை குடித்தால் சிறுநீரக பிரச்சனைகள் வராது.
- இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் சோம்பு தேநீர் குடித்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் ஆர்திரிடீஸ் மூட்டி வலியை சரி செய்ய இது உதவுகிறது.
- உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சோம்பு டீயை குடிப்பது நல்லது. மேலும் உங்கள் வாயை தூர்நாற்றம் இல்லாமல் எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.