Tamil Wealth

தாடி வைத்து கொள்ளும் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

தாடி வைத்து கொள்ளும் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

ஆண்கள் தங்கள் அழகிற்கு என வளர்க்கும் தாடி அவர்களுக்கு கொடுக்கும் நன்மைகள் தெரிந்தால் தாடியை சேவ் செய்பவர்கள் இனி செய்யமாட்டீர்கள்.

சருமத்தில் ஏற்படும் குறைபாடுகளை போக்குமா?

ஆண்கள் முகத்தில் அதிகம் வளர்க்கும் தாடி சூ   ரிய வெப்பத்தினால் முகத்தை தாக்கும் புற ஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. முகத்தில் இருக்கும் தாடி நோய் கிருமிகளிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்கிறது. முகத்திற்கு உபயோகப்படுத்தும் வேதி பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் கிரீம் போன்றவைகளை விட தாடி ஆண்களுக்கு சருமத்திற்கு பாதுகாப்பாக பயன்படுகிறது.

புற்று நோயை தடுக்குமா ?

சருமத்தின் செல்களை பாதித்து நுண்கிருமிகள் உடலில் சென்று ஏற்படுத்தும் நோய்களில் இருந்தும் மற்றும் உடலில் ஏற்படும் சரும புற்று நோய்க்கான செல்கள் உருவாவதையும் தடுக்கும் பாதுகாப்பு உறையாக ஆண்களுக்கு பயன்டுவது தாடி.

தாடித்தான் அழகு :

தாடி அவர்களின் முக தோற்றத்திற்கும், அழகான பொலிவுடன் காட்சி அளிக்க செய்கிறது. ஆண்களுக்கு தாடி இருப்பதே அவர்களின் கம்பீரத்தை காட்டுகிறது. அடிக்கடி சேவ் செய்வதால் சூரிய ஒளிகளின் தாக்கத்தினால் உண்டாகும் குறைபாடுகளை சந்திக்க நேரிடும் நிலைமை உருவாகும்.

தாடியை சேவ் செய்ய உதவும் கிரீம் :

தங்கள் தாடியை சேவ் செய்ய வேண்டும் என்று உபயோகப்படுத்தும் வேதி பொருட்கள் மற்றும் மின்சார சாதனங்களால் சில நேரம் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும். அவர்களுக்கு ஒத்துகொள்ளமல் அரிப்புகள், அலற்சிகள், வீக்கங்கள், தழும்புகள் வரும் அபாயம் ஏற்படும். சாதனங்கள் மற்றும் கிரீம்களின் ஒவ்வாமை தொல்லை இருந்தால் அதனை கைவிடுங்கள். அது மேலும் பல சரும விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

Share this story