அழகு சேர்ப்பதில் பலவிதம் இருக்கிறது தெரியுமா?

கஸ்தூரி மஞ்சளை பாலுடன் கலந்து நன்கு பசை போன்ற பதம் வந்த பிறகு அதை முகத்தில் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.
சர்க்கரையை நீருடன் சேர்த்து கரைய செய்து முகத்தில் தடவலாம், அத்துடன் தேங்காய் எண்ணெயையும் சேர்த்து பயன்படுத்த உடலின் சூடு தணிவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு, பருக்கள், மரு அனைத்தும் மறைந்து முகம் பளிசென்று அழகு பெரும்.
கத்தாழை ஜெல்லை முகத்திற்கு பயன்படுத்த அது முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பொலிவு பெற செய்து கூடுதல் அழகு சேர்க்கும்.
வெள்ளை நிறத்தில் இருப்பவர்களுக்கும் கூட முகத்தில் சிறு சிறு சிவப்பு திட்டுகள் காணப்படும் அதை நீக்குவதற்கு எலும்பிச்சை, கத்தாழை பயன்படுத்துங்கள். அவர்கள் முகத்தில் இருக்கும் சிவப்பு நிற குழிகளும் மறைந்து நல்ல தோற்றம் வருவதை காணலாம்.
முல்தானி மட்டியில் சந்தனம் சேர்த்து இருப்பதால் அது முகத்திற்கு வெள்ளை நிறத்தை கொடுக்கும் பண்பு கொண்டது.