பழங்களில் ரம்டான் மற்றும் மங்குஸ்தான் தெரியுமா உங்களுக்கு?

ரம்டானை கோடைகாலங்களில் சாப்பிட உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் குளிர்ச்சியை தரக்கூடியது.
பார்ப்பதற்கு முட்களால் சூழ்ந்து இருக்கும் இப்பழம் மிகவும் ருசி உடையது.
சாப்பிட கஷ்டமாகவே இருந்தாலும் இதன் பயன்கள் அதிகமே. இது அதிகம் விற்பனை ஆகும் இடம் குற்றாலம்.
மங்குஸ்தான் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான கலோரிகள் கிடைக்கிறது. உணவை சீக்கிரம் செரிக்க வைக்க உதவும்.
உடலில் உள்ள செல்களுக்கு ஒரு மிருதுவானதன்மையை கொடுக்கும்.
இதய நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதில் பெரும் பங்கு உள்ளது.
ரத்த அழுத்தம் சீராக அமைய வேண்டும் என்று நினைத்தால் இதை உண்ணலாம். தொடர் இருமல், தலை சுற்றுக்கு இப்பழம் நல்ல மருந்து.
கண் மற்றும் வாய் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் இவை பயன்படுகிறது. இரண்டுமே மருத்துவகுணம் மிக்க பழங்களே சிறுநீரக கோளாறுகளுக்கு இவை தீர்வு தரும்.
பக்கவாதம் நோய் மற்றும் மல சிக்கல் உள்ளவர்களுக்கு இவ்விரண்டும் நல்ல பலனை தரும் அல்லது கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் திறன் கொண்டது.