இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து வருகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் பற்றி தெரியுமா?

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து வருகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் பற்றி தெரியுமா?

நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்க கூடிய ஆற்றலை கொண்டது. சர்க்கரை நோயானது மிகவும் ஆபத்தை விளைவிக்கிறது. இதை பெரும்பாலும் கடைசி நேரத்தில் தான் மருத்துவரிடம் சென்று உறுதி செய்து கொள்கிறோம். ஆனால் முன்னதாகவே இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு 99% சர்க்கரை நோய் இருப்பதை உறுதி செய்து விடலாம். அவை என்னென்ன அறிகுறிகள் என்று இப்போது பார்க்கலாம்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை உணர்த்தும் அறிகுறிகள்:-

  • இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் வருவது இதன் முக்கிய அறிகுறியாகும்.
  • கண் பார்வை திடீரென மங்க துவங்கும். மேலும் எந்த ஒரு விஷயத்திலும் சீராக கவனம் செலுத்த முடியாமல் போகும் வாய்ப்புண்டு.
  • எவ்வளவு தான் நீர் அருந்தினாலும் வாய் வறட்சியான உணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி தாகம் வந்து கொண்டே இருக்கும்.
  • உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டாலும் அது குணமாக வெகு நாள்கள் ஆகும். மேலும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அடிக்கடி வரும்.
  • சருமத்தில் ஒருவிதமான அரிப்பு மற்றும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். எவ்வளவு தான் ஒருவர் சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் மீண்டும் பசி ஏற்படக் கூடும்.

மேற்கண்ட அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரை சந்தித்து பரிசோதித்து கொள்வது அவசியம். பிரெட், அரிசி உணவுகள் மற்றும் உருளைக் கிழங்கு போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தானியங்கள், காய்கறிகள் மற்றும் முட்டை போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

Share this story