Tamil Wealth

சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும் முறை பற்றி தெரியுமா?

சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும் முறை பற்றி தெரியுமா?

வெளியில் சுற்றி திரிவதால் சருமத் துளைகளில் ஆழமாக அழுக்குகள் தங்கிவிடுகின்றன. இவ்வாறு அழுக்குகள் தங்குவதால் கரும்புள்ளிகள், முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே இதை தடுக்கும் வழிமுறைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

சரும அழுக்கை வெளியேற்றும் முறை:-

  • பசும் பாலை ஒரு பஞ்சில் நனைத்து எடுத்து சருமத்தில் தடவி சுத்தம் செய்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறுவது மட்டுமில்லாமல் எண்ணெய் பசையும் வெளியேற்றப்படுகிறது.
  • உப்பு அல்லது சர்க்கரையை நீரில் கலந்து முகத்தை ஸ்க்ரப் செய்து கழுவுவதன் மூலம் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் எளிதில் மறையும்.
  • கடலை மாவு, மஞ்சள் தூள், பால் இவற்றில் எதையாவது பயன்படுத்தி சருமத்தில் பேஸ் பேக்காக பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை வெளியேறும்.
  • சருமத்தில் அமிலத்தன்மையை சீராக வைத்திருக்க ரோஸ் வாட்டரை பயன்படுத்தி முகத்தை துடைத்தாலே போதும். அது மட்டுமில்லாமல் ஆலிவ் எண்ணெயை சருமத்தில் பயன்படுத்தி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினாலே போதும். சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை குறைந்து முகம் பொலிவாக மாறும்.

Share this story