உங்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் மூலிகைகள் பற்றி தெரியுமா?

உங்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் மூலிகைகள் பற்றி தெரியுமா?

அதிகப்படியான வேலைப் பளு மற்றும் மன இறுக்கம் காரணமாக தலைவலி மற்றும் இதர உடல் உபாதைகள் ஏற்படும். இதனால் நீங்கள் எப்போதும் சோர்வாக  இருப்பீர்கள். இதை மாற்றி நீங்கள் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்க சில மூலிகைகளை பயன்படுத்தினாலே போதும். அவற்றை இப்போது பார்க்கலாம்.

உங்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் மூலிகைகள்:-

  • துளசி இலைகள் எளிதில் கிடைக்க கூடிய ஒரு மூலிகை தான். இது எதிர்மறை எண்ணங்களை போக்கும் தன்மை கொண்டது. கோவிலுக்கு செல்லும் போது துளசி இலைகளை நீரில் சேர்த்து கொடுப்பார்கள். இதை குடிப்பதன் மூலம் மன இறுக்கம் கட்டுபடுத்தப்படும்.
  • சீமை சாமந்தி பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் அதை வடிகட்டி ஆறியவுடன் பருகினால் மன அமைதி கிடைக்கும். மேலும் உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
  • அஷ்வகந்தா எனப்படும் மூலிகை மன அழுத்தத்தினை குறைப்பதுடன் உடலுக்கு வலிமை அளிக்கிறது. இது பெரும்பாலும் எல்லா ஆயுர்வேத கடைகளிலும் கிடைக்கும்.அஷ்வந்தா பொடியை நீரில் கலந்து குடித்தால் முழு பலனும் கிடைக்கும்.
  • லாவண்டரின் காய்ந்த இலையை தேநீர் தயாரித்து குடித்தால் உடல் புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் லாவண்டர் எண்ணெயினை பயன்படுத்தி ஆவி பிடித்தால் நல்ல புத்துணர்ச்சி பெற முடியும்.

Share this story