முடி உதிர்தலை கட்டுபடுத்தக் கூடிய பழங்கள் பற்றி தெரியுமா?

முடி உதிர்தலை கட்டுபடுத்தக் கூடிய பழங்கள் பற்றி தெரியுமா?

பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்காக மட்டும் தான் பயன்படுகிறது என பலரும் நினைப்பார்கள். ஆனால் அவற்றை சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பிற்கும் பயன்படுத்தலாம். தலைமுடி உதிர்வை கட்டுபடுத்தும் தன்மை கொண்ட சில வகையான பழங்களை இப்போது பார்க்கலாம்.

முடி உதிர்தலை கட்டுபடுத்தக் கூடிய பழங்கள்:-

  • சிட்ரஸ் வகையான பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பம்ளிமாஸ் போன்ற பழங்களை தலைமுடியில் நன்றாக தேய்த்து சிறிது நேரம் கழித்து தலைமுடியை அலசினால் முடி உதிர்தல் கட்டுப்படும்.
  • அடர்த்தியான நிறங்களை கொண்ட பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, திராட்சை போன்ற பழங்கள் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு அதை வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
  • செர்ரி பழங்கள் மற்றும் ப்ளம்ஸ் பழங்களை தலைமுடியில் மாஸ்காக செய்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் தலைமுடி வலிமை பெறும்.
  • பப்பாளி பழத்தை தேனுடன் கலந்து தலைமுடியில் தடவி காய்ந்ததும் கழுவினால் தலைமுடி பிரச்சனை சரியாகும். இதே போன்று வாழைப்பழத்தை தலைமுடியில் தடவி காய்ந்ததும் கழுவினால் முடி உதிர்வது குறையும்.
  • கொய்யா பழத்தை எலுமிச்சை சாறு, தேன் கலந்து தலைமுடியின் அடி வரையிலும் படும்படி செய்தால் தலைமுடி பிரச்சனை சரியாகும்.
  • நெல்லிக்காய் சாறுடன் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் கலந்து தலைமுடியின் அடிவரையிலும் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

Share this story