தினமும் சாப்பிடும் உணவுகளில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றி தெரியுமா?
Thu, 14 Sep 2017

ஒருவர் எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. அப்படி செய்தால் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கீழே கொடுக்கப்பட்ட சில உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் நல பாதிப்பு ஏற்படும்.
அதிகமாக சாப்பிடக் கூடாத உணவுகள்:-
- அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் சாதத்தை இரண்டு வேளை அல்லது அதற்கு மேலாக சாப்பிட்டால் ஆரோக்கிய சீர் குலைவு ஏற்படும். முக்கியமாக சொல்லவேண்டுமெனில் நீரிழிவு நோயின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது.
- கே. எப். சி மற்றும் மெக்டோனல்ட்ஸில் கிடைக்கும் ருசியான இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் நோய் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
- மால்களில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிட்டால் செரிமானம் ஆக இரண்டு மடங்கு உடல் வேளை செய்ய வேண்டியுள்ளது. செரிக்காத உணவுகள் உடலில் நச்சுகளாக மாறி நோயை ஏற்படுத்தும்.
- நம்மில் பலரும் உடல் சோர்வாக இருக்கும் போது டீ மற்றும் காபியை குடிப்பார்கள் ஆனால் அவை அனைத்தும் இரத்த அழுத்தத்தை அதிகரித்து விடும். மேலும் ஹார்மோன் பாதிப்பு மற்றும் பதட்டம் போன்றவை ஏற்படும்.
- பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை இரவில் முழுவதும் தவிர்க்க வேண்டும். இல்லையேல் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
- வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். இல்லையேல் பல் வலி மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.