மருத மரங்கள் தெரியுமா உங்களுக்கு, அதனால் நமக்கு நன்மைகள் கிடைக்குமா ?

நீளமான வளர்ச்சியை கொண்ட மருத மரங்கள் கொடுக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அனைவரும். இதனுடைய பட்டைகள் சிவந்த நிறத்தை கொண்டிருக்கும் மற்றும் அதன் மலர்களும் அதிக மருத்துவ குணங்கள் கொண்டதே.
பட்டைகள் கொடுக்கும் நன்மைகள் :
மருத மரங்களின் பட்டைகளை பாத்திரத்தில் எடுத்தும் அதனுடன் நீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொண்டு நன்கு காய்ச்ச வேண்டும். பின்னர் அந்த நீரினை வடிகட்ட வேண்டும். இதனை தினம் பருகி வர சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் கல்லடைப்பு போன்றவற்றால் உருவாகும் வலிகளை குண படுத்தவும் பயன்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி :
பட்டைகளில் இருந்து பெறப்படும் நீரினை அருந்துவதால் உடலில் புற்று நோய்க்கான செல்கள் உருவாவதை தடுக்கும் மற்றும் உடலில் இருக்கும் நச்சு தன்மையை போக்கவும் உதவுகிறது. உள் உறுப்புகளில் இருக்கும் பாதிப்புகளை குண படுத்தவும் மிகவும் பயன் உள்ளதாக கருத படுகிறது.
செய்முறை :
நன்கு உலர்ந்த பட்டைகளை எடுத்து கொண்டு அதனை அரைத்து பொடியாக்கி கொள்ளுங்கள். இதனை வெந்நீருடன் கலந்து குடிக்க உடலில் ஏற்படும் அரிப்புகள், தழும்புகளை போக்கவும் மற்றும் மூச்சு திணறல், சுவாச கோளாறுகளை சரி செய்யும், தொடர் இருமல், சளி தொல்லைகள், காச நோய்கள் உருவாகாமல் தடுக்கும் தன்மை கொண்டது .
காலையில் அருந்தும் காப்பிக்கு பதிலாக பட்டையில் இருந்து பெறப்படும் நீரினை சுடு நீருடன் கலந்து குடிக்க கிடைக்கும் நன்மைகள் .
- ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்
- சர்க்கரை வியாதி
- நோய் எதிர்ப்பு சக்தி
- இதயத்தில் இருக்கும் குறைபாடுகளை போக்கும்
- இரவில் தூக்கம் இன்றி அவதி படுவோர்க்கு நல்ல தீர்வாக அமையும்
உறுப்புகளை பாதுகாக்கும் :
உட்புற உறுப்புகளில் ஏற்படும் காயங்களையும், வலிகளையும் குண படுத்த மருத பட்டை நீருடன் பால் மற்றும் ஆடாதோடா இலைகளையும் சேர்த்து அரைத்து குடிக்க நல்ல பலனை தரும். ரத்தத்தை சுத்திகரிக்கவும், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்கவும், கல்லீரலை பாதுகாக்கவும் பட்டைகளுடன் மிளகு, சோம்பு, இஞ்சி போன்றவை கலந்து குடிக்கலாம்.