மழைநீரை சருமத்தில் எப்படி பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும் என தெரியுமா?
Sep 14, 2017, 15:07 IST

குளிர் மற்றும் மழைக் காலங்களில் சருமம் அதிகமாக வறட்சியடைவதோடு பாதிக்கபடுகிறது. அந்த மாதிரியான சமயத்தில் மழைநீரை பயன்படுத்தியே அழகான மற்றும் பொலிவான சருமத்தை பெற முடியும்.
மழைநீரை சருமத்தில் பயன்படுத்தும் முறை:-
- மழை நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேனை கரையும் படி கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த நீரை பயன்படுத்தி முகத்தை கழுவினால் சருமம் அழகாகும்.
- மழைநீரில் முல்தானி மெட்டி, கற்பூரம் ஆகியவற்றை கலந்து கொண்டு பின்னர் ரோஸ் வாட்டரை சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் தடவினால் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை மறையும்.
- முல்தானி மெட்டி, சந்தனப் பொடி, துளசி இலை, கிராம்பு எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மறைந்து சருமம் அழகாகும்.
- முல்தானி மெட்டி, மழைநீர், கிராம்பு எண்ணெய் மற்றும் வேப்பிலை பேஸ்ட் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.