முகத்தில் பசும்பாலை எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?

முகத்தில் பசும்பாலை எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?

முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என எல்லோரும் ஆசைப்படுவார்கள். ஆனால் அவர்கள் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் போன்றவை சருமத்தை கருப்பான தோற்றத்துடனே காண்பிக்கும். முகத்தை அழகாக்க பாலை வெறுமனே பயன்படுத்துவதற்கு பதிலாக அதனுடன் சில பொருள்களை பயன்படுத்தி சருமத்தில் உபயோகப்படுத்தினால் கிடைக்கும் பலனை இப்போது பார்க்கலாம்.

முகத்தில் பசும்பாலை பயன்படுத்தும் முறை:-

  • பாலுடன் சிறிதளவு ரோஸ் வாட்டரை சேர்த்து முகத்திற்கு தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரை பயன்படுத்தி முகத்தை ஸ்க்ரப் செய்து கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி அழகாக மாறலாம்.
  • ஓட்ஸை பொடியாக்கி பாலுடன் சேர்த்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து காய்ந்ததும் கழுவினால் சருமம் பொலிவு பெறும்.
  • பால், எலுமிச்சை சாறு மற்றும் தேன் மூன்றையும் கலந்து சருமத்தில் பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கிருமிகள் அழிந்து முகப்பருக்கள் மறையும்.
  • பப்பாளியை நன்றாக அரைத்து பாலுடன் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் மசாஜ் செய்து முகத்தினை குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவினால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
  • எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கேரட்டை அரைத்தோ அல்லது ஜூஸாகவோ மாற்றி பாலுடன் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் முகத்தை கழுவினால் எண்ணெய் பசையை கட்டுபடுத்தலாம்.

Share this story