வேர்க்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

வேர்க்கடலையை வறுத்து சாப்பிடுவதை விட அவித்து சாப்பிடுவதே உடலுக்கு நல்லது. இதையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே என்பதை மறவாமல் உட்கொள்ளுங்கள்.
இதில் இருக்கும் நியாஸின் சருமத்தில் ஏற்பட கூடிய புண்கள், தழும்புகள், சிறு சிறு கொப்பளங்கள் அனைத்தையும் வராமல் தடுத்து நம்மை தற்காத்து கொள்ளும்.
சிறு குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் மூளையின் செயல் திறனுக்கும் தேவையான பாஸ்பரஸ், உப்பு சத்துக்கள், புரத சத்துக்கள் அதிகம் அடங்கி உள்ளது தான் வேர்க்கடலை.
அதிக பருமனை கொண்டவர்கள் உடல் மெலிந்து அழகான தோற்றத்தை பெற விரும்புவோர் வேர்க்கடலையை வறுத்து சாப்பிட, அதிகம் உணவை எடுத்து கொள்ள மாட்டீர்கள்.
உதிர போக்கை தவிர்க்கும் திறன் வேர்கடலைக்கு உண்டு. உடலின் உட்புறம் ஏற்பட கூடிய ரத்தம் வடிதலுக்கு இது பயன்படுகிறது.
இதில் இருக்கும் கால்சியம், பொட்டாசியம் நமது பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலு கொடுக்கும், மூளையையும் சுறு சுறுப்புடன் செயல் பட செய்யும்.